1944 - ‘வி-1 பறக்கும் குண்டு’ என்ற ஆயுதத்தால் லண்டனை ஜெர்மனி தாக்கியது. ‘வெர்கல்ட்டங்ஸ்வாஃபே(வஞ்சம்தீர்க்கும் ஆயுதம்)-1’ என்று பெயரிடப்பட்ட இதுதான் உலகின் முதல் வெற்றிகரமானதும், பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டதும், பயன்படுத்தப்பட்டதுமான ஏவுகணையாகும். பல்ஸ்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட, சீர்வேக(க்ரூஸ்) ஏவுகணையான இது, 850 கிலோ வெடிபொருளை(வார்ஹெட்), 250 கி.மீ. தொலைவுக்கு 640 கி.மீ. வேகத்தில் எடுத்துச்சென்று வீசக்கூடியது.